பெரம்பலூர்: தமிழகத்தில் முடங்கிய பத்திரப்பதிவு: 2 நாட்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்பு
ஸ்டார் 3.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவண எழுத்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால், பெரம்பலூர் உட்பட தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 10 மற்றும் 11-ம் தேதி வரை இந்த வேலைநிறுத்தம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.