புதுக்கோட்டை: புதுக்கோட்டை மக்களே கவனத்திற்கு! நீதிமன்றமே இனி உங்கள் கிராமத்திற்கு வரும்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்! நீதிமன்றத்திற்கு நேரில் செல்ல முடியாதவர்கள் இனி இந்த வாகனம் மூலம் காணொலி காட்சி வாயிலாக நீதிபதிகளை அணுகி வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளலாம். கிராமப்புற மக்களுக்கான மிக முக்கிய சேவை இது.