செங்கம்: சேறும் சகதியுமாக மாறிய சாலை - அவதியடையும் மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி 16வது வார்டு அருந்ததி காலனி தெருவில், பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமானது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலையைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.