பண்ருட்டி: "அதிபராக மாற நினைக்கும் மோடிக்கு முடிவு கட்டுங்கள்" - வெள்ளகேட் பகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
யாதவ் மகா சபா இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளகேட் பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், 'கடலூர், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். திமுக என்ற ஒரு கட்சி தான் அனைத்து தரப்பு சமுதாயத்தையும் ஆதரிக்கின்ற வகையில் பதவிகளை வழங்கி அங்கீகாரம் செய்து வருகிறது.' என்றார்.