கோவை வடக்கு: மருதமலை முருகன் கோயில்: வழுக்கும் படிக்கட்டுகளால் பக்தர்கள் அவதி!
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி அபிஷேகப் பொருட்கள் படிக்கட்டுகளில் வழிந்தோடுவதால் பக்தர்கள் வழுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. படிக்கட்டுகளை உடனடியாகச் சுத்தம் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.