அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் இடலாக்குடி: சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் - போராட்டம் நடத்த ஜமாத் எச்சரிக்கை
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.