கோவை வடக்கு: பாலக்காடு ரயில் கொள்ளை: திண்டுக்கல் நடிகர் அதிரடி கைது! 600 சிசிடிவி கேமராக்கள் மூலம் சிக்கினார்
பாலக்காடு ரயில் கொள்ளைச் சம்பவத்தில், திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலமுருகன் என்ற நடிகரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். 47 பவுன் நகைகளைத் திருடி, சினிமா பாணியில் தலைமறைவாக இருந்தவரை 600 சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிஜிட்டல் தடயங்கள் மூலம் போலீஸார் கோயம்புத்தூரில் வைத்துப் பிடித்தனர்.