அரியலூர்: பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கேக் மற்றும் வாழ்த்து அட்டை
அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு 670 பள்ளிகளில் பயிலும் 83,440 மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ந. மிருணாளினி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அவற்றை வழங்கினார்.