திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்: திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் முருகப்பெருமாள் சூரனை வதம் செய்யும் காட்சியை தரிசித்தனர். விரதம் இருந்த பக்தர்கள் கடலில் நீராடி தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்.