பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் 4-வது நாளாக குளிக்கத் தடை - தொடரும் வெள்ளப்பெருக்கு
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.