திருவாடனை: கல்லூர் கண்மாயில் ஆழ்துளைக் கிணறு: நீர்வரத்து வாய்க்கால் அடைப்பால் விவசாயிகள் தவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கல்லூர் கண்மாயில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றின் மண் கழிவுகளால் நீர்வரத்து வாய்க்கால் அடைபட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.