குடியாத்தம்: 1.5 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் - 5 பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 1.5 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கத்திலிருந்து நோட்டுகளைக் கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து குடியாத்தம் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.