கோவை வடக்கு: கோவை செல்வபுரம்: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பழுது - மக்கள் அவதி
கோவை தெற்கு தொகுதி செல்வபுரம் பகுதியில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ காலத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் தற்போது செயலற்று உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி சிரமப்படுவதால், இயந்திரத்தை உடனடியாக சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.