தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன்பிடி தொழில் முடக்கம்: 3 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடியில் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் 3 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 50,000-க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.