கயத்தாறு: மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்பு தானம்: அரசு சார்பில் மரியாதை!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது இரு சிறுநீரகங்கள் மற்றும் கண் விழிகள் தானம் செய்யப்பட்டன. இதையொட்டி அரசு சார்பில் கோவில்பட்டி சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.