திண்டுக்கல் கிழக்கு: ரியல் எஸ்டேட் இடைத்தரகர்களுக்கு நல வாரியம் அமைக்க கோரிக்கை - திண்டுக்கல்லில் நடந்த கூட்டம்
திண்டுக்கல்லில் நடைபெற்ற நில வணிக தொழில் முனைவோர் நல சங்க கூட்டத்தில், தனி நல வாரியம் அமைத்தல், அடையாள அட்டை மற்றும் கமிஷன் விகிதங்கள் தொடர்பான 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.