
#BREAKING: "இரவில் தூங்க முடியல... 1000 ஏக்கர் சவுக்கு மரம் கருகிடுச்சு!" - விழுப்புரம் மின்வாரிய கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பினர் அடுக்கடுக்கான பரபரப்புப் புகார்!
விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், மண்டல தலைமை பொறியாளர் திரு. கோ. சதாசிவம் அவர்கள் தலைமையில் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்பார்வை பொறியாளர்கள் திருமதி. அ. பாரதி, திரு. சரவணதுரைமோகன் மற்றும் நுகர்வோர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கடவம்பாக்கம் வி. எம். மணி அவர்கள் கலந்துகொண்டு பேசிய முக்கியப் புள்ளிகள்:
: விழுப்புரம் மாவட்டத்தில் பகலிலும், இரவிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் தூங்க முடியாமலும், மாணவர்கள் படிக்க முடியாமலும் அவதியடைந்து வருகின்றனர்.
மின்சாரம் நின்று மீண்டும் வரும்போது ஏற்படும் உயர் அழுத்த மின்சாரம் (High Voltage) காரணமாக, மாவட்டத்தில் சுமார் 1,000 ஏக்கருக்கும் மேல் சவுக்கு மரங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன.
கிராமப்புறங்களில் ஆபத்தாகத் தாழ்வாகச் செல்லும் மின்சாரக் கம்பிகளை உடனடியாக இழுத்துக் கட்ட வேண்டும்.
விவசாய பம்பு செட்டுகளுக்குத் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் மற்றும் விடுபட்ட விவசாய மின் இணைப்பு எண்களை உடனே கணினியில் பதிவு செய்ய வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு மின்சார வாரியம் உடனே தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
#Villupuram #ElectricityBoard #PowerCut #TNEB #VillupuramNews #FarmersIssue #ConsumerProtection #News32 #TamilNews