14 வயது சிறுமி பாலியல் வன்புணர்ச்சி வழக்கு
⚖️ எதிரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த சிவா (36) என்பவர், 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில், விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10,000 அபராதம் மற்றும் மற்றொரு பிரிவின் கீழ் 1 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
👮♀️ வழக்கை திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி லதா விசாரித்தார்.
⚖️ போக்சோ நீதிமன்ற நீதிபதி திருமதி வினோதா அவர்கள் தீர்ப்பளித்தார்.
💰 பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🛡️ குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
#விழுப்புரம் #திண்டிவனம் #POCSO #போக்சோ #காவல்துறை #நீதிமன்றதீர்ப்பு #பெண்கள்பாதுகாப்பு #ChildSafety #VillupuramPolice #JusticeServed