
#BREAKING: வளவனூர் அரசு பள்ளியில் பரபரப்பு! 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கேட்டு ஆதிதிராவிட மாணவன் திருப்பி அனுப்பப்பட்டாரா? 😱 பெற்றோர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
📌 "தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்புக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடைமுறையே இல்லை..!" தலைமை ஆசிரியரின் செயலால் இதுவரை 8 மாணவர்கள் பாதிப்பு எனப் புகார்!
👇 நடந்தது என்ன? முழு விபரம் இதோ:
விழுப்புரம் அருகே வளவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்வதற்காக ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வந்துள்ளார். ஆனால், அந்த மாணவனிடம் "8-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே பள்ளியில் சேர்க்கப்படும்" எனக்கூறி தலைமை ஆசிரியர் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) மட்டுமே வழங்கப்படும். இதுவரை எட்டாம் வகுப்புக்கு என்று தனியாக அரசு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடைமுறையே இல்லை! அப்படி இருக்கையில், இந்த தலைமை ஆசிரியர் மட்டும் இல்லாத ஒரு சான்றிதழைக் கேட்டு மாணவர்களை ஏன் திருப்பி அனுப்ப வேண்டும்? ஆதிதிராவிட மற்றும் ஏழை மாணவர்கள் என்பதால் தட்டிக்கழிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதே காரணத்தைக் கூறி இதுவரை 8-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களை அந்த தலைமை ஆசிரியர் பள்ளியில் சேர்க்காமல் திருப்பி அனுப்பியிருப்பதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பாடுபட்டு வரும் நிலையில், தலைமை ஆசிரியரின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் உடனடியாகத் தலையிட்டு, சக ஆசிரியர்களிடம் விசாரித்து உண்மை நிலவரத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்!
#Viluppuram #ViluppuramNews #Valavanur #GovernmentSchool #SchoolAdmission #EducationDept #C_E_O #DistrictCollector #TamilNaduNews #BreakingNews #SocialJustice #SaveGovernmentSchools