அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி: கஞ்சா போதையில் பேரூராட்சி ஊழியர் படுகொலை - தப்பி ஓடிய நபருக்கு வலை
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கஞ்சா போதையில் இருந்த நபர், பேரூராட்சி ஊழியர் கவினை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர்.