கே.வி.குப்பம்: வேலூர்: இருசக்கர வாகன ஓட்டியை காப்பாற்ற முயன்றதில் கவிழ்ந்த லோடு வேன்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே, இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதாமல் இருக்க முயன்ற லோடு வேன் கவிழ்ந்தது. இதில் வேன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து கே.வி.குப்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.