விளவங்கோடு: மார்த்தாண்டம்: கால்வாய் ஓரம் மின்கம்பம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, ஆபத்தான நிலையில் உள்ள சிற்றாறு பட்டணங்கால் கால்வாய் ஓரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்படுவதை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பாதுகாப்பு கருதி, பாதுகாப்பான இடத்தில் மின்கம்பங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.