ஓசூர்: ஓசூரில் கனமழை: பள்ளி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதி
ஓசூரில் இன்று காலை 7 மணி முதல் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் மழையினால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.