போடிநாயக்கனூர்: போடிநாயக்கனூர் சிவன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு 6 அடி உயர சிவலிங்கத்திற்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.