நாகப்பட்டினம்: நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி
நாகப்பட்டினத்தில் இந்து முன்னணி விநாயகர் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் செழியன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இடுப்பு மற்றும் தோள்பட்டையில் காயம் அடைந்த அவர் ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.