சாத்தான்குளம்: குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படாததால் பேய்குளம் அருகே நார்த்தங்குறிச்சியில் சாலை மறியல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்குளம் அருகே உள்ள நார்த்தங்குறிச்சிக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது இதனை தொடர்ந்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை எடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்