சாத்தான்குளம்: சாஸ்தாவிநல்லூர் ராஜீவ் காந்தி நகரில் குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
சாத்தான்குளம் ஒன்றியம், சாஸ்தாவிநல்லூர் ஊராட்சியில் உள்ள ராஜீவ் காந்தி நகரில், மக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அபாய நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த தொட்டியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.