சாத்தான்குளம்: முதலூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
முதலூர் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் தொடங்கி நடைபெற்றது. முகாமை அறக்கட்டளை நிறுவனர் பிரியா அருள் முருகன் துவக்கி வைத்தார். இதில் முதலூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.