வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற சங்கடஹார சதுர்த்தி வழிபாடு
வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹார சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி உட்பிரகார உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.