கிருஷ்ணகிரி: நெடுங்கல் பெருமாள் கோயில்: பக்தர்களைக் கொட்டிய தேனீக்கள் - 50 பேர் மருத்துவமனையில் அனுமதி
காவேரிப்பட்டணம் அருகே நெடுங்கல் மலைக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டின் போது பக்தர்களை தேனீக்கள் கொட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.