ஆத்தூர்: செம்பட்டி அருகே மூதாட்டியிடம் பட்டப்பகலில் 2 பவுன் செயின் பறிப்பு: வைரலாகும் சிசிடிவி காட்சி!
Attur, Dindigul | Sep 29, 2026 திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பட்டப்பகலில் முகவரி கேட்பது போல நடித்து 65 வயது மூதாட்டியிடம் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற டிப் டாப் வாலிபரை செம்பட்டி காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.