நாகப்பட்டினம்: விஸ்வகர்மா சமூகத்திற்கு 10 சதவீத உள் இடஒதுக்கீடு கோரிக்கை: நாகையில் முப்பெரும் விழா
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம கை வினைஞர்கள் சங்க முப்பெரும் விழாவில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி உதவித்தொகை மற்றும் தொழிலாளர் நல வாரியம் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.