போடிநாயக்கனூர்: தேனி குரங்கணி மலை கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
தேனி குரங்கணி மலை கிராமத்தில் 16-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்காக 'குறிஞ்சி நிலம்' சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்ற இந்த முகாமில் மா. சுப்பிரமணியன், தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.