இங்கிலாந்திற்கும் பிரான்ஸ்க்கும் இடையே உள்ள English Channel என்கிற கடினமான கடல் வழி பகுதியை 36 கி.மீ தூரத்தை 12 மணி நேரம் பத்து நிமிடங்கள் நீச்சலடித்து கடந்து சாதனை படைத்த தேனியை சேர்ந்த அதவைத்(18) என்கிற மாணவன் இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் வந்த மாணவரை அவருடைய பெற்றோர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்