கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே மீட்கப்பட்ட சிறுவன்: பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மீட்கப்பட்ட 4 வயது சிறுவன் ருத்ரனின் பெற்றோர் அல்லது உறவினர்கள் 30 நாட்களுக்குள் உரிய சான்றுகளுடன் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தவறும் பட்சத்தில் சட்டப்படி தத்தெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.