விளாத்திகுளத்தை சேர்ந்த கணேஷ். இவர் அங்குள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பிரபல தனியார் நிறுவன கோதுமை மாவு பாக்கெட் வாங்கியுள்ளார். அதனை வீட்டில் பிரித்துப் பார்த்தபோது காலாவதி தேதி முடிவடையாமல் இருந்தும், அதில், புழுக்கள் இருந்ததும் தெரியவந்தது. இது சம்பந்தமாக கோதுமை மாவு நிறுவனத்தை அணுகியுள்ளனர். இது பற்றி உணவு பாதுகாப்பு துறைக்கு பாதிக்கப்பட்ட கணேஷ் புகார் அளித்துள்ளார்.