ஆத்தூர்: திண்டுக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை கூட்டு தூய்மைப் பணிகள் - ஆட்சியர் தகவல்
திண்டுக்கல் ஆத்தூர் பகுதியில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆய்வு செய்தார். இனி வரும் வாரங்களில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் கூட்டு தூய்மைப் பணிகள் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.