சிவகங்கை: சிவகங்கை இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
சிவகங்கை இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ், சுபாஷ், ராஜகோபால், சபரி வேலன் ஆகிய 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர்.