தூத்துக்குடி: பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தில், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நோய்களைக் காரணம் காட்டி மீன் கழிவு ஆலைகளை அகற்ற வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.