திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்: பத்திரப்பதிவு அலுவலகத்தில் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு - நகல் எழுதுவோர் போராட்டம்
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் STAR 3.O திட்டத்தை ரத்து செய்யக் கோரி பத்திர நகல் எழுதுவோர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காகிதம் இல்லா பதிவு முறைகளை கைவிட வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.