திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல் சிறுமலையில் வனவிலங்குகளை வேட்டையாடிய நபர் கைது: நாட்டு துப்பாக்கி பறிமுதல்
திண்டுக்கல் சிறுமலை பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடிய தாமஸ் என்ற நபரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் விலங்குகளின் எலும்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மற்றவர்களுக்கு தொடர்பு உள்ளதா என வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.