சிவகங்கை: 5 வயது மகனுடன் சாலையில் படுத்து பெண் போராட்டம் - அரசு வேலை கோரி பரபரப்பு
சிவகங்கை பேருந்து நிலையம் முன், கணவரை இழந்த பானுப்பிரியா என்பவர் தனக்கு அரசு வேலை வழங்கக் கோரி தனது 5 வயது மகனுடன் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அழைத்துச் சென்றனர்.