பழனி: கத்தாளம் பாறை கிராமத்தில் தன்னார்வலர்கள் இணைந்து மலைவாழ் பழங்குடியினருக்கு புத்தாடை, அரிசி, மளிகை பொருட்களை தீபாவளி பரிசாக வழங்கிக் கொண்டாடினர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தன்னார்வலர்கள், தங்கரத அரிமா சங்க நிர்வாகிகள் இணைந்து மலைவாழ் பழங்குடியினருக்கு தீபாவளி பரிசு வழங்கினர். பழனியை அடுத்த கத்தாளம் பாறை கிராமத்தில் மலைமீது வசித்து வரும் 50 மலைவாழ் பழங்குடியினர் குடும்பங்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கினர்.