பழனி: முதல்வர் கோப்பை போட்டிகள்: பரிசுகளை வென்று அசத்திய பழனி பள்ளி மாணவிகள்
முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான இறகுப்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்த பழனி பாரத் வித்யா பவன் பள்ளி மாணவிகளை பள்ளி நிர்வாகம் பாராட்டியது. இதில் இறகுப்பந்து போட்டியில் 50 ஆயிரம் ரூபாயும், கைப்பந்து போட்டியில் 25 ஆயிரம் ரூபாயும் பரிசாக வென்றுள்ளனர்.