அரூர்: பட்டா கேட்டு அரசு நிலத்தில் சமைத்து சாப்பிடும் போராட்டம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீழானூர் கிராமத்தில், 212 குடும்பத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, அரசு நிலத்தில் குடியேறி அடுப்பு மூட்டி சமைத்து சாப்பிடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.