பாளையங்கோட்டை: நெல்லை: சிறுமிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்டவருக்கு 1 ஆண்டு சிறை - போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிறுமிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்ட மாயாண்டி என்பவருக்கு, மாவட்ட போக்சோ நீதிமன்றம் 1 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 25,000 ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.