வேடசந்தூர்: பூசாரிபட்டியில் 13 கிலோ எடை கொண்ட ராட்சத காளான்
வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளிகளான முத்துராஜ், சுரேஷ் ஆகியோர் அதே பகுதியில் காளான் தேடி சென்ற போது அங்கு ராட்சத காளான் ஒன்று முளைத்திருந்ததை கண்டு ஆனந்த அதிர்ச்சடைந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த காளான்களை பறித்துச் சென்று எடை போட்டு பார்த்தபோது 13 கிலோ, 6 கிலோ மற்றும் 5 கிலோ எடையில் இருந்தன.