தூத்துக்குடி: தூத்துக்குடியில் லாரி மோதி பெண் பலி: குழந்தைகளுடன் சென்றபோது நேர்ந்த கோர விபத்து
தூத்துக்குடியில் குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்ற பெண் டிப்பர் லாரி மோதி உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தெர்மல் போலீசார் விசாரணை மேற்கொண்டு லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.