ஆத்தூர்: பட்டிவீரன்பட்டி: ஏ.டி.எம். மையத்திற்குள் அமர்ந்து உணவருந்திய நபர்களால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள எஸ்பிஐ ஏ.டி.எம். மையத்திற்குள் பணம் நிரப்ப வந்த நபர்கள் நீண்ட நேரம் உணவருந்தி வாடிக்கையாளர்களை தடுத்த சம்பவம் குறித்து வங்கி மேலாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.