திருநெல்வேலி: நெல்லை: கார் பார்க்கிங் தகராறில் அண்ணன், தம்பி பட்டப்பகலில் குத்திக்கொலை
நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியில் கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அண்ணன், தம்பி இருவர் குத்திக் கொல்லப்பட்டனர். கொலை செய்த செந்தில்குமார் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.